இலங்கையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை 5 இலட்சத்தை தாண்டியது

இலங்கையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை 5 இலட்சத்தை தாண்டியது

இலங்கையில் இதுவரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 10 ஆயிரத்து 173 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 736 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 5811 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.