வத்தளை - தொழிற்சாலை ஒன்றில் 49 பேருக்கு கொரோனா

வத்தளை - தொழிற்சாலை ஒன்றில் 49 பேருக்கு கொரோனா

வத்தள பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதேகர் வருண அபேசேகர தெரிவித்துள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் குறித்த தொழிற்சாலையில், 120 தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியானவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.