மன்ன கண்ணா மற்றும் பாச்சா கைது

மன்ன கண்ணா மற்றும் பாச்சா கைது

கஞ்சிபாண இம்றான் என அறியப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்றானின் தந்தை மீது தாக்கிய மன்ன கண்ணா மற்றும் பாச்சா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபாண இம்றான் என அறியப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்றானின் தந்தை மீது நேற்றைய தினம், மாளிகாவத்தை பகுதியில் வைத்து, ஒரு குழுவினர் ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தது. மாளிகாவத்தை - சித்தர்ம மாவத்தைக்கு அருகில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த கஞ்சிபாண இம்றானின் தந்தையான 65 வயதுடையவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும், பயன்படுத்திய ஆயுதம் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்ன கண்ணா என அறியப்படும் மாரிமுத்து கணேஷராஜாவும், பாச்சா என அறியப்படும் மகேந்திரன் பிரதீப் ஆகியோரோ இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.