
குருநகரில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!
யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் குருநகர் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியவர்களுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானோர் கடமையாற்றிய நிறுவன ஊழியர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மேலும் குருநகர் பாசையூர் சந்தைப் பகுதியில் எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்ட மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சுகாதார தொழிலாளிகள் 7 பேர் உட்பட இன்றைய தினம் 38 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்தனர்.