முல்லைத்தீவு பொலிசாரின் முன்மாதிரியான நடவடிக்கைகள்!

முல்லைத்தீவு பொலிசாரின் முன்மாதிரியான நடவடிக்கைகள்!

முல்லைத்தீவு பொலிசாரினால் கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பொலிசாரினால் மாவட்ட பேருந்து நிலைய வளாகத்தை அண்டிய பகுதிகளில் covid 19 தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

“தூரத்திணை பேணுவோம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் சுகாதார நடை முறைகளை பின்பற்றுதல் தொடர்பாக பொது மக்களை விழிப்பூட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

இதன்போது இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர், மாவட்ட பொதுச் சுகாதார நிர்வாக உத்தியோகத்தர்,முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் , முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொலிசார் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு பொலிசாரின் முன்மாதிரியான நடவடிக்கைகள்! 1முல்லைத்தீவு பொலிசாரின் முன்மாதிரியான நடவடிக்கைகள்! 2முல்லைத்தீவு பொலிசாரின் முன்மாதிரியான நடவடிக்கைகள்! 3முல்லைத்தீவு பொலிசாரின் முன்மாதிரியான நடவடிக்கைகள்! 2முல்லைத்தீவு பொலிசாரின் முன்மாதிரியான நடவடிக்கைகள்! 1