பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்...!

பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்...!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு நாடு வழமைக்கு திரும்பி வரும் நிலையில் பொது மக்கள் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமானது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் தற்பொழுது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கட்டாயம் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.