பிரதமர் அலுவலக பாதுகாப்பு பிரிவு அதிகாரிக்கு கொரோனா தொற்று இல்லை

பிரதமர் அலுவலக பாதுகாப்பு பிரிவு அதிகாரிக்கு கொரோனா தொற்று இல்லை

பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடமையாற்றும் எந்தவொரு பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதன்படி, பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிவரும் பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதி ஏற்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியானது உண்மைக்கு புறம்பானது எனவும், பிரதமர் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்த வெளிப்புற பிரிவு அதிகாரி ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் பங்குபற்றும் வெளி நிகழ்வுகளின் போது மாத்திரம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுவந்த குறித்த பாதுகாப்பு அதிகாரி, ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு பின்னர் கடமைகளக்கு சமூகமளிக்கவில்லை எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.