கம்பஹா மாவட்ட வாழ் மக்களுக்கான விசேட அறிவித்தல்...!

கம்பஹா மாவட்ட வாழ் மக்களுக்கான விசேட அறிவித்தல்...!

கொழும்பு மாவட்டத்தில், கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை முதலான காவல்துறை அதிகார பிரதேசங்களில் இன்று மாலை 6 மணிமுதல் மீள் அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், மறு அறிவித்தல்வரை அவ்வாறே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அங்குள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை நாளைய தினம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை அவற்றை திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.