கொரோனா தொற்று நோய் அகன்று போக யாழ்.மறைமாவட்ட ஆயர் விசேட ஆராதனை

கொரோனா தொற்று நோய் அகன்று போக யாழ்.மறைமாவட்ட ஆயர் விசேட ஆராதனை

நாட்டில் கொரோனா தொற்று நோய் அகன்று போக, யாழ்.மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றது

யாழ்ப்பாணம் , திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்கள் அடங்கிய வட,கிழக்கு ஆயர் மன்றத்தினரால் நாட்டில் கொரோனா தொற்று நோய் அகன்று போக  இன்று (சனிக்கிழமை) ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை, ஆராதனைகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் மரியன்னை தேவாலய சிற்றாலயத்தில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தின் பங்கு பற்றுதலோடு இடம்பெற்றது

யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணம் மரியன்னை சிற்றாலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை, ஆராதனையின்போது கொரோனா தொற்று நீங்குவதற்கு பிரார்த்தித்ததோடு, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் வேண்டியும் ஆயர் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

குறித்த விசேட பூசையில் யாழ்.மறை மாவட்டத்தைச் சேர்ந்த குருமார்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.