ஆபத்தான பாதையில் உள்ள உலகின் சில நாடுகள்..!

ஆபத்தான பாதையில் உள்ள உலகின் சில நாடுகள்..!

உலகின் சில நாடுகள் ஆபத்தான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரொஸ் எதனம் கெப்றியேஸஸ்  நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றின் காரணமாக உலகம் தற்போது தீர்க்கமான ஒரு கட்டத்தில் இருக்கின்றது.

எனவே, தேவையற்ற மரணங்ளை தடுப்பதற்கும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் வீழ்ச்சியடையாமல் தடுப்பதற்கும் உலகத்தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.