கபில் தேவிற்கு மாரடைப்பு உடனடி சத்திரசிகிச்சை..!

கபில் தேவிற்கு மாரடைப்பு உடனடி சத்திரசிகிச்சை..!

1983ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வெற்றியீட்டிக் கொடுத்த இந்தியா கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருக்கு உடனடியாக சத்திரசிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்லி மருத்துவமனையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தனக்கு மார்பு வலி என தெரிவித்துக் கொண்டு வந்ததாக வைத்தியர் அதுல் மதுர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்