
புத்தளம் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் – ஆராச்சிகட்டு பகுதியில் நேற்றிரவு (20) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் 88 ஆம் கட்டை பகுதியில் காரொன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பத்தலுஓயா பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.