
இத்தாலியில் உள்ள இலங்கை மாணவர்கள் முன்வைத்த விசேட கோரிக்கை..!
எதிர்வரும் ஜனவாரி மாதம் இடம்பெற உள்ள கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள இலங்கை மாணவர்கள் சிலர் தற்சமயம் இத்தாலியில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்குள் வர முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தாங்கள் நாட்டுக்குள் வருவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் அல்லது இத்தாலியில் இருந்தே பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.