
கிழக்கு மாகாண மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! ஆளுநர் எடுத்துள்ள தீர்மானம்
கிழக்கு மாகாணத்தில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அவசர தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தீர்மானித்துள்ளார்.
கோவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாட்டின் பல அரச நிறுவனங்கள் சிறப்பு சுகாதார அறிவுறுத்தல்கள் குறித்த பொது நடவடிக்கைகளை தடை செய்துள்ளதால் ஆளுநர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த வைரஸ் காரணமாக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது ஒத்திவைக்கப்படுவது நியாயமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் செய்திகளுக்கு மேலதிகமாக, அஞ்சல் மூலமும் மக்கள் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இது கோவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், பல்வேறு முகவர்களால் மக்களை தவறாக வழிநடத்துவதைத் தடுக்கவும் உதவும்.
ஆளுநர் அலுவலகத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி மூலமாகவும் 026-2222102, governorep@gmail.com மக்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.