கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று

கட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த வலயத்தில் உள்ள 15 தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கே இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

அதன்படி, கட்டுநாயக்க முதலீட்டு வர்த்தக வலயத்தில் இதுவரையில் மொத்தமாக 268 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.