
அமைச்சர் பந்துலவுக்குக் கொரோனா பரிசோதனை: வெளிவந்த முடிவு
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கொரோனா பரிசோதனையை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டுள்ளார்.
கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள பல மொத்த விற்பனையாளர்களுடனன் சமீபத்தில் அமைச்சருடன் கலந்துரையாடலுக்குக் கலந்துகொண்டிருந்தார்.
கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வியாபாரி ஒருவர் கலந்துரையாடலில் இணைந்தமையால் அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்வெளியாகியுள்ளது
இந்நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது பந்துல குணவர்தனவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.