
மேல்மாகாணத்தில் மாத்திரம் கடந்த 24 மணிநேரத்தில் 282 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் மேல்மாகாணத்தில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 134 பேர் ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து மொத்தமாக 246 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், 48 சந்தேக நபர்களிடமிருந்து 2 கிலோகிராமுக்கு அதிகளவான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், 2 கிராமுக்கு அதிகளவான ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்த 7 பேர் கைது இதன்போது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.