இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எந்த மாற்றமும் இல்லை - நீதியமைச்சர் அலி சப்ரி உறுதி

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எந்த மாற்றமும் இல்லை - நீதியமைச்சர் அலி சப்ரி உறுதி

20வது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் 20வது திருத்தத்தில் மூன்று மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நீதியமைச்சர் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அதிகாரம் அரச ஸ்தாபனங்களில் கணக்காய்வு, மற்றும் அவசர சட்ட மூலங்களை சமர்ப்பித்தல் தொடர்பான விடயங்களிலேயே அரசாங்கம் மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றம் தனது ஆயுட்காலத்தின் இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்த பின்னரே அதனை கலைக்க முடியும் என்ற திருத்தத்தை முன்னெடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச ஸ்தாபனங்களில் கணக்காய்வினை மேற்கொள்வதை 19வது திருத்தத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது என்ற முடிவில் மாற்றங்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.

அண்மையில் விமல் வீரவன்சவும் இதே தகவல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.