இருபது தொடர்பான விவாதம் நாளை

இருபது தொடர்பான விவாதம் நாளை

இவ்வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நாளைய தினம் (21) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது

இந்நிலையில், குறித்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்கட்சியின் பிரதான ஒருகிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர் பல்வேறு பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டு வருவதாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் அடிப்படையில் கூட்டங்களை நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.