ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் 86 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் 86 பேர் கைது

தனிமைப்படுத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா, யக்கல மற்றும் நிட்டம்புவ காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட கொழும்பு-கண்டி பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் இன்று (20) முதல் அப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 4ஆம் திகதி தொடக்கம் இன்று அதிகாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் 388 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 58 வாகனங்களும் காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதுவரையில் காவற்துறையினர் பொறுப்பேற்றுள்ள வாகனங்களில் 40 உந்துருளிகளும் 12 முச்சக்கர வண்டிகளும் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.