ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் மருந்துகங்கள் மற்றும் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் திறப்பு
கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மருந்தங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை திறக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் 19 காவல்துறை அதிகார பிரதேசங்களில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ளது.
இதேவேளை, கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானம் இழந்தோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் முதற்கட்டமாக இன்றைய தினம் மினுவாங்கொடை - திவுலபிட்டி, அத்தனகல்ல மற்றும் மீரிகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 72 ஆயிரத்து 345 பேருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது
கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானத்தை இழந்தோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணி கொவிட்-19 தொற்று காரணமாக கம்பஹா மாவட்டத்தின் 19 காலற்துறை அதிகார பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது
இதன்காரணமாக பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேனேரம் மத்துகமவில் பிரதேசத்தில் 3 கிராம சேவகர்பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகள் ஊடாக வாகனங்கள் பயணிக்க முடியும் என்ற போதும், அங்கு வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாது என காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதே நேரம் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றசாட்டில் இதுவரையில் 300க்கும் அதிகமானவர்கள் கைதாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.