ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானம் இழந்தோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கும் செயற்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் முதற்கட்டமாக இன்று முதல் மினுவாங்கொடை - திவுவலபிட்டி, அத்தனகல்ல மற்றும் மீரிகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 72 ஆயிரத்து 345 பேருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானத்தை இழந்தோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணி கொவிட்-19 தொற்று காரணமாக கம்பஹா மாவட்டத்தின் 19 காலற்துறை அதிகார பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது

இதன்காரணமாக பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.