கிங் கங்கையில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்- கங்கையில் குதித்து காப்பாற்றிய கான்ஸ்டபிஸ்

கிங் கங்கையில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்- கங்கையில் குதித்து காப்பாற்றிய கான்ஸ்டபிஸ்

பத்தேகம காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள கிங் கங்கையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவரை பத்தேகம காவல்துறை விசேட அதிரடிப் பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற பெண் நேற்றைய தினம் (19) முறைப்பாடு ஒன்றை வழங்குவதற்காக பத்தேகம காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த பெண் பத்தேகம அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கராபிடிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.