காவல்துறையினருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் “மாகந்துரே மதூஷ்“ உயிரிழப்பு

காவல்துறையினருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் “மாகந்துரே மதூஷ்“ உயிரிழப்பு

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஸித மாளிகாவத்தை பகுதியில் காவற்துறை மற்றும் பாதாளகுழுவினருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார்

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாக காவற்துறையினருக்கு மாகந்துரே மதுஷ் தெரிவித்து அந்த பகுதிக்கு அழைத்து சென்ற போது பாதாள குழு உறுப்பினர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மாகந்துரே மதுஷ் உயிரிழந்ததுடன், இரண்டு காவற்துறை கான்ஸ்டரிபிள்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர் உயிரிழந்த பகுதியில் இருந்து 220 மில்லியன் ரூபா பெறுமதியான 22 கிலோகிராம் ஹெரோயின், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் உந்துருளி என்பனவும் காவற்துறையினால் மீட்கப்பட்டுள்ளன.