வவுனியா வைத்தியசாலையில் கொரோனா அபாயம் இல்லை! பணிப்பாளர் நந்தகுமார் தகவல்

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா அபாயம் இல்லை! பணிப்பாளர் நந்தகுமார் தகவல்

வவுனியா வைத்தியசாலையில் கொவிட்-19 சமூக பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் கொரோனா அபாயம் காணப்படுவதாக வெளியான செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட்டே வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டிருந்தனர். அதன் மூலம் சமூகப்பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

இன்று தொற்று நீக்கல் செயற்பாட்டிற்காகவே வைத்திசாலையின் பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது. ஏனைய சிகிச்சை செயற்பாடுகள் வழமைபோல நடைபெற்றுவருகின்றது.

ஊழியர்கள் பயணிக்கும் மற்றைய வாயில் வழியாக நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்றார்.