கொரோனா காரணமாக இந்த வாரம் மிகவும் தீர்மானமிக்கது- இராணுவத் தளபதி

கொரோனா காரணமாக இந்த வாரம் மிகவும் தீர்மானமிக்கது- இராணுவத் தளபதி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வாரம் நாட்டில் தீர்மானமிக்க வாரமாக மாறவுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த நிலையத்தின் பிரதான லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 17 கொவிட் தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மத்துகமயில் தனிமைப்படுத்தப்பட்ட 3 கிராமங்களின் மக்களுக்கு இன்றைய தினம் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

களுத்துறை - மத்துகம பிரதேச செயலாளர்க்குட்பட்ட ஓவிட்டிகல, பதுகம மற்றும் பதுகம புது கொலனி ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டன.

மத்துகம பகுதியில் கொவிட் 19 தொற்றுறதியானவர்களில் 25 பேர் ஓவிட்டிகல, பதுகம மற்றும் பதுகல கொலனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காவற்துறை அதிகாரி ஒருவரின் இரண்டு உறவினர்களுக் கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து ஆமர் வீதி காவலரனின் பொறுப்பதிகாரி உள்ள 12 பேர் தனிமைப்படுத்தலுக்காக ஹபராதுவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஆமர் வீதி காவலரண் முழுமையாக தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய காவற்துறை நிலையங்களை சேர்ந்த காவற்துறையினர் தற்சமயம் ஆமர் வீதி காவரணில் தற்சமயம் கடமைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் தொழிற்சாலைக்கு மேலதிகமாக கட்டுநாயக்க ஏற்றுமதி வலையத்தின் 13 தொழிற்சாலைகளை சேர்ந்த 216 கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை முதலீட்டு சபை இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையின் கீழ் இன்று முதல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலைய சேவையாளர்கள் தங்களது தொழில் இடங்களுக்கு தனியார் வாகனங்களை விடுத்து தொழிற்சாலைகளினால் வழங்கப்படும் போக்குவரத்து வாகனங்களில் பிரவேசிக்க வேண்டும் என காவற்துறை அறிவிறுத்தியுள்ளது.

அந்த வர்த்தக வலையத்தின் சேவையாளர்கள் தமது பணியிட அடையாள அட்டைகளை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் என காவற்துறை அறிவித்துள்ளது.

இதேவேளை கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அங்கு பணியாற்றுபவர்களில் 390 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த பரிசோதனையின் அறிக்கை இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.