
பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படும் கைதிகள் : காரணம் வெளியானது!
சமூகத்திற்கு அச்சறுத்தலாக விளங்கும் கைதிகளை பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை காலி பூஸ்ஸ சிறைச்சாலை அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளினால் சமூகத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.