
தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு!
நாட்டில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 205 பேர் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த குறித்த அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 54 ஆயிரத்து 328 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளனர்.
மேலும் நாடாளாய ரீதியில் முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 83 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேலும் 9 ஆயிரத்து 838 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.