மனதிற்குப் பிடித்தவர்களை திருமணம் செய்ய நல்லநாள் பார்க்கும் முதல் இவற்றையெல்லாம் பார்த்தால் வாழ்க்கை சொர்க்கமே..

மனதிற்குப் பிடித்தவர்களை திருமணம் செய்ய நல்லநாள் பார்க்கும் முதல் இவற்றையெல்லாம் பார்த்தால் வாழ்க்கை சொர்க்கமே..

திருமணம் செய்ய நாள், நட்சத்திரம் எல்லாம் பார்ப்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் கலாசாரமே. நாள் குறிக்காமல், நட்சத்திரம் பார்க்காமல் செய்யப்படும் திருமணம் எந்த அளவிற்கு நல்லபடியாக அமையும் என்பது சந்தேகமே.

இப்போது நடைபெறும் திருமணங்களில் 50வீதமான திருமணங்கள் பெற்றோரின் சம்மதம் இல்லாமல், ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் தங்களின் விருப்ப்படி செய்து கொள்கின்றார்கள்.

இதில் தவறு எந்த தவறும் இல்லை என சொல்லவில்லை சொல்லமுடியாது. காரணம் பல திருமணங்கள் விவாகரத்து வரை செல்கிறது என்பதே உண்மை.

மனதிற்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்ல விடயம் தான். ஆனால் திருமணம் செய்யும் போது இந்த விடயங்களை பார்த்து விட்டு, நல்ல நாள் குறித்து திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பான அமையும்.

 

 

 

 

அவ்வகையில் திருமணத்திற்கு பொருத்தமான நாட்களாக எப்படி குறிக்கின்றது? அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது? என்பதில் குழப்பங்கள் ஏற்படலாம். இந்த பதிவின் மூலம் நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்.

திருமணம் செய்யும் மாதம் மல மாதமாக இருக்க கூடாது. (மலமாதம் என்பது ஒரே மாதத்தில் 2 அமாவாசை அல்லது பௌர்ணமிகள்) இந்த மாதத்தில் திருமணம் செய்யவே கூடாது.

தமிழ் மாதத்தின் படி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை மற்றும் பங்குனி மாதங்களைத் தவிர்ந்த, ஏனைய மாதங்களில் திருமணம் செய்வதற்கு பொருத்தமான நாளாக இருப்பதில்லை. எனவே எந்த மாதங்களில் திருமணம் செய்வது நல்லது என்பதை பார்க்க வேண்டும்.

 

 

ஜோதிடத்தில் சுக்ல பட்க்ஷ காலத்தில் திருமணம் செய்வது நல்ல பலன் தரும் என குறிப்பிடுகிறது. திருமணத்தை சுக்ல பட்க்ஷத்தில் செய்வது நல்லது. திருமணம் செய்ய சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் போன்ற நாட்களைத் தவிர்த்து புதன், வியாழன் மற்றும் வெள்ளி போன்ற சுப நாட்களை தேர்வு செய்வது மிக மிக நல்லது. மற்றைய நாட்களில் சுபமுகூர்த்தம் இருந்தாலும் இந்த நாட்கள் அதனை விட சிறந்த நாள்கள் என குறிப்பிடப்படுகின்றது.

ஒவ்வொரு நாளும் லக்கினங்களை கொண்டு கடந்து செல்கிறது. அந்த வகையில் சுப லக்கினங்களாக விளங்கும் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு மற்றும் மீனம் ஆகிய லக்கினங்களில் திருமணம் செய்வது நல்லது. திதிகளை பொறுத்தவரை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி மற்றும் திரியோதசி இவற்றை தவிர மற்ற திதிகளில் திருமணம் செய்வது அவ்வளவு நல்லதல்ல. இவைகளை காலண்டரில் பார்த்தால் நமக்கே தெரிந்துவிடும்.

 

 

அக்னி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம் மற்றும் கசரயோகங்கள் போன்ற காலங்கள் நடைபெறும் சமயங்களில் திருமணத்தை தவிர்ப்பது நல்லது. திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணிற்கும், ஆணிற்கும் அவரவர்களுடைய ராசியின் படி அன்றைய நாளில் சந்திராஷ்டமம் இல்லாமல் இருப்பது நல்லது.

அவர்கள் இருவருடைய இராசிக்கும் அன்றைய நாளில் சந்திராஷ்டமம் இருக்கிறதா? என்பதை கட்டாயம் ஆராய வேண்டும். அதுபோல் அந்த இருவரின் ஜனனத்தின் போது கணிக்கப்பட்ட ஜென்ம நட்சத்திர நாட்களில் திருமணம் செய்யக்கூடாது.

அதே போல அவர்களின் பிறந்த திகதி மற்றும் பிறந்த கிழமைகளில் திருமணம் செய்வதையும் தவிர்ப்பது தான் நல்லது. மணமக்கள் உடைய திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருக்கும் லக்னத்திற்கும், அவர்களுடைய ராசிக்கும் எட்டாம் வீட்டில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இடம் பெற்றிருக்கும் சமயத்தில் திருமணம் செய்யக்கூடாது.

 

 

இது போன்ற விஷயங்களை ஆராய்ந்து நம்மால் முடிந்த அளவிற்கு நல்ல நாளில் திருமணம் செய்வது மிக மிக நல்லது. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இதனை நல்ல நேரம் பார்த்து செய்தால் தான் அந்த வாழ்க்கை வளமாக மாறும் என்பதே நிதர்சனம்.