
வவுனியாவில் கொரோனா அச்சம் - மூடப்பட்டது பொது வைத்தியசாலை
வவுனியா பொது வைத்தியசாலை இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று முதல் வெளிநோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் வைத்தியர்கள் , நிர்வாக ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் மாத்திரமே சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உட்பகுதிக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றையதினம் வவுனியா பொது வைத்தியசாலை முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.