இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள விடயம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள விடயம்

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 61,907 கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

சௌபாக்கிய கொவிட் 19 புனர்வாழ்வு கடன் வசதியின் ஊடாக மூன்று கட்டங்களின் கீழ் பதிவு செய்யயப்பட்ட இந்த விண்ணப்பங்களின் மொத்த பெறுமதி 177,954 மில்லியனாகும்.

அங்கிகரிக்கப்பட்ட வங்கிகளின் ஊடாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 45,582 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 133,192 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.