சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மோர்கன், தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடி காட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

 

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 6 ஓவரில் 48 ரன்கள் சேர்த்தது. ராகுல் திரிபாதி 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 36 ரன்களும், நிதிஷ் ராணா 29 ரன்களும் சேர்த்தனர்.

 

அந்த்ரே ரஸல் 11 பந்தில் 9 ரன்கள் அடித்து ஏமாற்றம் அளிக்க கொல்கத்தா 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்திருந்தது.

5-வது விக்கெட்டுக்கு மோர்கன் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் கொல்கத்தா 150 ரன்னைக் கடந்தது. கடைசி ஓவரில் 16 ரன்கள் அடிக்க 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் அடித்துள்ளது.

 

மோர்கன் 23 பந்தில் 34 ரன்கள் அடித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 14 பந்தில் தலா 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.