மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தில் பிராந்தியக் காரியாலயத்தின் விற்பனைக் கிளை திறப்பு!

மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தில் பிராந்தியக் காரியாலயத்தின் விற்பனைக் கிளை திறப்பு!

இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தில் பிராந்தியக் காரியாலயத்தின் விற்பனைக் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு வந்தாறு மூலையில் இன்று (18) இடம்பெற்றுள்ளது.

அத்துடன், இந்த நிகழ்வு இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய இணைப்பாளர் கணேசன் மலைமகள் தலைமையில் இடம்பெற்றது.

மேலும், இந்நிகழ்வில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன தலைவர் சட்டத்தரணி சாரங்கா காஞ்சனி ரத்னாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வந்தாறுமூலை நூலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் கிளையில் தரமான மரமுந்திரிகை உற்பத்திப் பொருட்களையும் மரமுந்திரிகைக் கன்றுகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன அலுவலர்களான முகாமைத்துவ உதவியாளர் என்.ஜே.ஷாலினி, மரமுந்திரிகை ‪சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பி. சிவநாதன், கள உதவியாளர்களான எஸ்.சாந்தி எஸ்.தேவராஜன் ஆகியோர் உட்பட இன்னும் பல அலுலர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்ககது.

மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தில் பிராந்தியக் காரியாலயத்தின் விற்பனைக் கிளை திறப்பு! 1

மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தில் பிராந்தியக் காரியாலயத்தின் விற்பனைக் கிளை திறப்பு! 2

மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தில் பிராந்தியக் காரியாலயத்தின் விற்பனைக் கிளை திறப்பு! 3