சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 4 கோடியை அண்மித்துள்ளது.

இதன்படி, சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 99 இலட்சத்து 37 ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 11 இலட்சத்து 4 ஆயிரத்து 183 ஆக உயர்வடைந்துள்ளது.

100க்கும் அதிக நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்திய கொவிட் 19 தொற்றானது, அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளில் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மாத்திரம் இதுவரையில் 83 இலட்சத்து 41 ஆயிரத்து 824 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அங்கு இதுவரையில், 2 இலட்சத்து 24 ஆயிரத்து 278 பேர் கொவிட்19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், 2 கோடியே 98 இலட்சத்து 75 ஆயிரத்து 308 பேர் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.