முல்லைத்தீவில் விபத்தில் படுகாயமடைந்திருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

முல்லைத்தீவில் விபத்தில் படுகாயமடைந்திருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் மாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மாட்டுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.

இதன்போது சம்பவத்தில் இராசையா தியாகராயா (வயது64) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.