இன்றைய ராசி பலன்கள் 17/10/2020

இன்றைய ராசி பலன்கள் 17/10/2020

மேஷம்

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உள்ளன்போடு பழகிய ஒருவர் உங்கள் மனக்குழப்பத்தை அகற்றுவார்.

ரிஷபம்

தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும். அதிகம் செலவாகும் என்று நினைத்த காரிய மொன்று குறைந்த செலவில் முடிவாகலாம்.

மிதுனம்

தடைகளை தாண்டி முன்னேறும் நாள். தனவரவு செலவிற்கேற்ப வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். திடீர் பயணம் உண்டு.

கடகம்

தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். குடும்பத்தினர் உங்கள் சொல்லிற்கு மதிப்புக் கொடுப்பர். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். பெற்றோர்களின் ஒத்துழப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சிம்மம்

பணியாளர் தொல்லை அகலும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று பஞ்சாயத்துகள் மூலம் தீர்வு பெறும்.

கன்னி

எதிர்பாராத வரவு வந்து இதயத்தை மகிழ்விக்கும் நாள். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும். சொந்த, பந்தங்களின் ஒத்துழைப்பு உண்டு. சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்

மனஉறுதியுடன் செயல்படும் நாள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நன்மை ஏற்படும். உடல் நலனில் கொஞ்சம் கவனம் தேவை. விலகிச் சென்றர்கள் விரும்பி வந்திணைவர்.

விருச்சகம்

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்களின் தொடர்பு கிடைக்கும். தொலை பேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம்.

தனுசு

வீண் பழிகள் அகலும் நாள். அயல் நாட்டிலிருந்து எதிர்பார்த்த அனுகூலத்தகவல் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும். உடல் நலம் சீராகும்.

மகரம்

ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீடு கட்டும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

கும்பம்

நண்பர்கள் நல்ல தகவலைக்கொண்டு வந்து சேர்க்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைவீர்கள்.

மீனம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகம் செலவாகலாம்.