வல்லை வெடிப்பு சம்பவம் - நீர்வேலி இளைஞன் கைது

வல்லை வெடிப்பு சம்பவம் - நீர்வேலி இளைஞன் கைது

வல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராணுவ முகாமுக்கு அண்மையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நீர்வேலியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வல்லை இராணுவ முகாமுக்கு அண்மையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இதில் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நீர்வேலிப் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோப்பாய் பொலிஸாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.