மின்னுயர்த்தி அறுந்து வீழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு: கண்டியில் சம்பவம்

மின்னுயர்த்தி அறுந்து வீழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு: கண்டியில் சம்பவம்

கண்டி- லேவெல்ல பகுதியில் பு​டவைக்கடையொன்றில் தற்காலிக மின்னுயர்த்தி அறுந்து வீழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கண்டி- லேவெல்ல தர்மசோக மாவத்தையில் அமைந்துள்ள பு​டவைக்கடையொன்றில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்