யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து - தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து - தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை, ஏ - 9 பிரதான வீதியின் புத்தூர் சந்திப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

யாழ் - காரைநகர் சாலையில் பேருந்து கொழும்புக்கு பயணித்துக் கொண்டிருந்தது.

இதன்போது சாவகச்சேரி - புத்தூர் சந்திப்பகுதியில் திடீரென வீதியைக் கடக்க முயன்ற சிறுவன் மீது பேருந்து மோதுவதை தவிர்ப்பதற்கு சாரதி முயன்றவேளை, வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த புகையிரதக் கடவையுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

எனினும் பேருந்தில் பயணித்த எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் பேருந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.