இலங்கையில் நாளை முதல் கைதிகளுக்கு தொலைபேசி

இலங்கையில் நாளை முதல் கைதிகளுக்கு தொலைபேசி

சிறைச்சாலைகளில் நிறுவப்பட்ட பொது தொலைபேசிகள் மூலம் கைதிகள் தங்கள் வீட்டு உறவினர்களுடன் பேச அனுமதிக்குமாறு சிறைச்சாலை சீர்திருத்தம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளை ஒரு மாத காலத்திற்கு இலவசமாக வழங்க தேவையான வசதிகளை வழங்குமாறு அமைச்சர் இலங்கை தொலைதொடர்பு சேவைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி கைதிகள் நாளை (16) முதல் தங்கள் உறவினர்களுடன் இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இலங்கையில் கோவிட் 19 இன் தற்போதைய நிலைமை காரணமாக, கைதிகள் தங்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இதனால் கைதிகள் மன ரீதியாக பாதிக்கப்படலாம். இதை நிவர்த்தி செய்யும் பொருட்டே கைதிகளுக்கு இலவசமாக தொலைபேசியில் உரையாட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.