பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படத் தயாராகவிருந்த அரச பேருந்து மீது திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்!
வவுனியா செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் மீது மரம் ஒன்று பாறி வீழ்ந்துள்ளது எனினும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் செட்டிகுளத்திலிருந்து வவுனியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு தயாராக இருந்த பேருந்து மீதே திடீரென ஏற்பட்ட பலத்த காற்றின் வேகத்தினால் அருகிலிருந்த பாரிய பாலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
எனினும் பேருந்தில் இருந்தவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் .