யாழில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் படுகாயம்!

யாழில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் படுகாயம்!

யாழ் - பலாலி வீதியின் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று மாலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியே விபத்து சம்பவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த பெண் யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.