விபத்தில் காயமடைந்த பானதுறை காவல்நிலைய பொறுப்பதிகாரி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

விபத்தில் காயமடைந்த பானதுறை காவல்நிலைய பொறுப்பதிகாரி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

பானதுறை-ஹேனமுல்ல பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த பானதுறை-வடக்கு காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த இரு உந்துருளி சாரதிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 12 மணியளவில் அதிக வேகத்துடன் பயணித்த இரண்டு உந்துருளிகளும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, காவல்நிலைய பொறுப்பதிகாரி பயணித்த ஜீப் வண்டியுடன் மோதுண்டதாகவும் இதனால் குறித்த ஜீப் வண்டி வீதியிலிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்வத்தில் காயமடைந்த பொறுப்பதிகாரி மற்றும் உந்துருளிகளில் பயணித்த இருவரையும் பானதுறை ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.