தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனம்

தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனம்

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டின் அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றதை அடுத்து
அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க முடியும் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலானோர் பேங்கொங்கில் ஒன்றுகூடி கூட்டங்களை நடாத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன்போது கிட்டத்தட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து மன்னரின் ஆட்சி மாற வேண்டும் எனவும் பிரதமதர் பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.