பானதுறை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் வாகனத்துடன் மோதிய உந்துருளிகள்- மூவர் காயம்

பானதுறை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் வாகனத்துடன் மோதிய உந்துருளிகள்- மூவர் காயம்

பானதுறை-ஹேனமுல்ல பிரதேசத்தில் அதிக வேகத்துடன் பயணித்த இரண்டு உந்துருளிகள், பானதுறை-வடக்கு காவல் நிலைய பொறுப்பதிகாரி பயணித்த ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாகவும் காயமடைந்த மற்றைய இருவரும் உந்துருளிகளில் பயணித்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதிக வேகத்துடன் பயணித்த இரண்டு உந்துருளிகளும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, காவல்நிலைய பொறுப்பதிகாரி பயணித்த ஜீப் வண்டியுடன் மோதுண்டதாகவும் இதனால் குறித்த ஜீப் வண்டி வீதியிலிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்வத்தில் காயமடைந்த பொறுப்பதிகாரி மற்றும் உந்துருளிகளில் பயணித்த இருவரையும் பானதுறை ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.