இறக்குமதி வரி குறைக்கப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை...!

இறக்குமதி வரி குறைக்கப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை...!

பெரிய வெங்காயம் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை.

கொவிட் நிலவரத்தை கருத்தில் கொண்டு பருப்பு, சீனி, பெரிய வெங்காயம், மற்றும் டின் மீன் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியே நேற்றைய தினம் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சீனி ஒரு கிலோகிராம் 85 ரூபாவிற்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 100 ரூபாவிற்கும், பெரிய டின் மீன் ஒன்று 200 ரூபாவிற்கும் விற்பனை செய்யும் வகையில் குறித்த இறக்குமதி வரி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இதுவரை அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.