வாழைச்சேனை - ஹைராத் வீதியில் விபத்து! இருவர் படுகாயம்
வாழைச்சேனை ஹைராத் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது முச்சக்கர வண்டி ஒன்று மோதியுள்ளதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026