கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த கல்வி அமைச்சர்...!

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த கல்வி அமைச்சர்...!

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இன்றைய தினம் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்துத்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை உட்பட ஒட்டுமொத்த சமூகமும் நாட்டின் கல்வி முறையில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் கல்வி சீர்திருத்தங்களை ஆதரிக்கும் என்று இதன் போது அவர் தெரிவித்துள்ளார்.

கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு தனது முழு ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளதாகவும் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.