யாழில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருட்டு: பணம், நகைகள் பறிபோயின!

யாழில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருட்டு: பணம், நகைகள் பறிபோயின!

யாழ்ப்பாணம், இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (புதன்கிழமை) மதியம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் தனது கடமைகளுக்காக வெளியில் சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உள்நுழைந்த திருடர்களால் வீட்டிலிருந்த ஐந்து பவுண் தங்க நகையும் 20ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திருட்டு தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.