06 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன...!

06 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன...!

அமைச்சர் உதய கம்மன்பில தலைமைத்துவம் வகிக்கும் பிவித்துரு ஹெல உருமய உள்ளிட்ட 06 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய அருணலு மக்கள் முன்னணி, மக்கள் சேவை கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, பிவித்துரு ஹெல உருமய, சமத்துவ கட்சி, மற்றும் சிங்கள ராவய ஆகிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிங்கள ராவய கட்சியின் பெயரை எங்கள் மக்கள் ராவய என பெயர் திருத்தம் செய்யப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.